இளைஞனே வா!

Posted by Kaviulagam | சமுதாயம் | Tuesday 16 June 2009 12:19 AM

உறக்கத்திலிருக்கும் இளைஞனே எழுந்துவா

போதைப் பொருளை ஒழித்துவிட்டுவா

போதனை ஏற்றிவிடும் அரசியலாரை கழித்து விட்டுவா

தீப்பந்தங்கள் ஏந்தி தீவிரவாதியை சுட்டுவிட்டுவா

தீமையைப் பரப்பும் கயவரை கடலில்

வீசி எறிந்து விட்டு வீறுநடையாய்வா!

சாதிக் கொடுமைகள் பேசும் சாத்தான்களை

சாட்டையடி கொடுத்து விட்டுவா!

காதலாள் கசிந்து உருகும் மனதைக்

கட்டுப்படுத்தி விட்டுவா

கனவுகள் காண்! இந்தியா வல்லரசாக! மிக நல்லரசாக!

கைகளை ஒற்றுமைப் படுத்து தேச உயர்வுக்காக

மனதை திடப்படுத்து கோழையாய் வாழ்வதைவிடுத்து

சுதந்திரமாய் சுற்றித்திரியல்ல சுதந்திரம்

தோளை நிமிர்த்து வல்லூறுகளை வீழ்த்த

தோல்வி என்பதே உன் அகராதியில் இல்லை

துன்பப் பாறைகள் தலையில் உருண்டாலும் துவளாதே!

நீ எஃகை விட வலிமையான வைரநெஞ்சன்

சுவர்க்கம் உன் காலடியில் பணியாளாக

வா இளைஞனே வா! உன் பாரதத்தாய்

சண்டையற்ற, சமயமற்ற, தீமையற்ற,

துன்பமற்ற, தோல்வியற்ற, கவலையற்ற

நகைகளை அவள் சூட்டிக்கொள்ள நீ தருவாயா?

தருவாய்! நீ நிச்சயம் தருவாய்!

ஏனெனில் நீ சுவாசிப்பது இந்தியக் காற்று.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (2 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +2 (from 2 votes)
  • Share/Bookmark

வட்டம்

Posted by Kaviulagam | பொதுகவிதை | Monday 15 June 2009 12:12 AM

உலகவட்டம் உருண்டைக்குள்

மனிதவட்டம் நான்கு சுவருக்குள்

கண்களின் வட்டம் கருணைக்குள்

வாயின்வட்டம் நாவின் வாய்மைக்குள்

கைகளின் வட்டம் நேர்மைக்குள்

கால்களின் வட்டம் நற்பாதைக்குள்

செவிகளின் வட்டம் இனியசொல்லிற்குள்

மூச்சின்வட்டம் நாட்டின் தியாகத்திற்க்குள்

நெஞ்சின் வட்டம் நீதிக்குள்

இந்தவட்டத்திற்குள் நீயிருந்தால்

வெற்றிவட்டம் உன் வட்டத்திற்குள்தான்.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (2 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +2 (from 2 votes)
  • Share/Bookmark

Page 7 of 7« First...34567



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!