தேவை
உடலை சுத்தமாக்க சௌகாரம் தேவை
உள்ளத்தை சுத்தமாக்க இறைவழி தேவை
கண்களை சுத்தமாக்க கருணை தேவை
நாவை சுத்தமாக்க நற்சொல் தேவை
இதயத்தை சுத்தமாக்க நல்லெண்ணங்கள் தேவை.
உடலை சுத்தமாக்க சௌகாரம் தேவை
உள்ளத்தை சுத்தமாக்க இறைவழி தேவை
கண்களை சுத்தமாக்க கருணை தேவை
நாவை சுத்தமாக்க நற்சொல் தேவை
இதயத்தை சுத்தமாக்க நல்லெண்ணங்கள் தேவை.
சுமையில்லாத பரப்பு
சிறு குழந்தைக்கு உற்சாகம்
சுகமான ராகங்கள்
இதயத்திற்கு உற்சாகம்
முதலாளியின் ஊதிய உயர்வு
உழைப்பாளியின் உற்சாகம்
காதலியின் கடைக்கண்
காதலனுக்கு உற்சாகம்
அன்பான கணவன் மனைவியின்
செயல்களை பாராட்டுவது உற்சாகம்
நோயாளிக்கு மருத்துவரின்
கவனிப்பு உற்சாகம்
நொடிந்த உள்ளத்திற்கு
நெகிழ்ந்த சொல் உற்சாகம்
இறைவன் திருவடி திருநாமம்
என்றென்றும் உற்சாகம் உற்சாகம்.
மன்னிப்பு கேட்பது மனிதநேயம்
மன்னிப்பு தருவது மனித தர்மம்
மன்னிப்பு பாவங்கள் நீதி
மன்னிக்கும் முடியாத கொடுமைகள் அதர்மம்
மன்னிப்பு கொடுத்துக் கொண்டிருப்பது அநீதி
மன்னிப்பு கேட்டுக் கொண்டிருப்பது கோழைத்தனம்
மன்னிப்பு கொடுத்து கொண்டிருப்பது தவறின் ஆரம்பம்
மன்னிப்பை தொடர்பவரை மன்னியோம்!
| ||
