வா இளைஞனே! வா
இளைஞனே! நீ நினைப்பது
நடக்கவில்லையா?
கேட்பதெல்லாம் உனக்கு
கிடைக்கவில்லையா?
எண்ணமெல்லாம் உடனே
செயல்படவில்லையா?
சொர்க்கம் உன் காலில்
வரவில்லையா?
சொந்தங்கள் உனைப்
புரிந்து கொள்ளவில்லையா?
சுதந்திரமாய் பறந்து திரிந்து
வாழ முடியவில்லையா?
தீர்வு போதையா? இளைஞனே!
இவர்களெல்லாம் உனை
புரிந்து கொள்ள தேவையில்லை
உன் மீது உனக்கேன்
நம்பிக்கையில்லை இளைஞனே!
உனை நீ நம்பாதபோது – உனை
மற்றவர் எப்படி புரிந்து கொள்வார்கள் இளைஞனே
வாழ வேண்டிய உனக்கு காலம்
நீண்டுள்ளது! கரம் கூப்புகிறாள்
காலத்தாய்! அவள் கைகளில்
தவழ்ந்து விடு! அவள் புகிழன்
உச்சியில் உனை வைத்து
உச்சி முகர்வாள்! நிச்சயம்
போதை உனக்கு பாம்பின் விட(ஷ)ம்
பற்கள் பட்டதும் பலனின்றி இறப்பாய்
போதை உன் பாதையை மறைக்கும் – அதை
காலால் இடறிவிட்டு
களிப்புடன் நடந்துசெல்
கால்களில் கனிந்துவிட்டது காலம்
சாதிக்கப் பிறந்தவன் நீ
சாதிப் போதையிலும் விழாதே
சவுக்காலடித்து பறந்து செல்
வானம் விரிந்து கிடக்கு – இந்தபூமி
மிக பறந்து கிடக்கு – உனக்காக!






