அவசர முடிவு

Posted by Kaviulagam | சமுதாயம், பொதுகவிதை | Monday 31 August 2009 10:57 PM

அவசர முடிவெடு ஆம்புலன்ஸ் நேரத்தில்

அவசர முடிவை தவிர் சிக்னல் நேரத்தில்

அவசர முடிவெடு வாய்ப்பு

கதவை தட்டும் நேரத்தில்

அவசர முடிவை தவிர்

குழந்தைகள் மனம் பேசும் நேரத்தில்

அவசர முடிவெடு மக்கள்

இயற்கையில் பாதிக்கும் நேரத்தில்

அவசர முடிவை தவிர்

ஆன்றோர்கள் சொல்கேள்

அவசரயுகத்தில் அவசர அவசரமாக

முடிவெடுத்து பின் அவசரப் பட்டுவிட்டோமோ

என்று அவசரமின்றி யோசிப்பதில்

என்ன அவசியமுள்ளது.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

குழந்தை

Posted by Kaviulagam | சமுதாயம், பொதுகவிதை | Sunday 30 August 2009 10:56 PM

கண்ணில் தெரியுது குறும்பு

இதழில் வழியுது தேன்கரும்பு

மலர்ந்தே மணம் வீசும் அரும்பு

கைகளிலிருக்கு சாதனை பரபரப்பு

குல்லாயோ ராஜகளையின் முகப்பு

பார்த்தபின் தோன்றுமோ வேறு நினைப்பு

ஏய்! வார்த்தையில்லை நீ இறைவனின் அற்புத படைப்பு

உனக்கு என்றுமே இல்லை என் இதய கதவடைப்பு.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

உதவி

Posted by Kaviulagam | இயற்கை | Saturday 29 August 2009 10:54 PM

உதவி பெறுபவர் உபத்திரவம்

தராதவரை உதவி உதவியதாக இருக்க வேண்டும்

உதவி பெரிதாகும் போது பெறுபவர்

சரியான நபருக்கு கிடைக்க வேண்டும்

உதவி கல்வியாயிருப்பின் உயிருள்ளவரை

அதை பெரிதாக போற்ற வேண்டும்

உதவி உடல் உழைப்பு சம்மந்தப் பட்டதாயின்

உள்ளன் போடு ஏற்க வேண்டும்

உதவி சிறந்த தொண்டாக

இருப்பின் அதைப் போற்ற வேண்டும்

உதவி உதவியை எதிர்பார்த்து

செய்யும் உதவியாயின் உதவியை

உதறித்தள்ளுவதே சாலச் சிறந்தது.

VN:F [1.8.3_1051]
Rating: 6.0/10 (2 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

Page 1 of 111234510...Last »



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!