திறமை

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம் | Wednesday 19 August 2009 10:17 PM

வேலைச் செய்ய

திறமை தேவை

தேவையான வேலை செய்ய

துணிவு தேவை

துணிவாக வேலை செய்ய

விவேகம் தேவை

விவேகம் கலந்து செய்ய

தன்னம்பிக்கை தேவை

தன்னம்பிக்கையோடு செய்ய

தன்னை உயர்த்துதல் தேவை

தன்னை உயர்த்திக் கொள்ள

உயர்ந்த வேலைகள் உன் கைகளில்

உன் கைகளில் நேர்மை தேவை

உறுதியான உள்ளம் தேவை

உள்ளம் தெளிவானால் திறமையும்

துணிவும் காலடியில்.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

அச்சம்

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம் | Tuesday 18 August 2009 10:33 PM

அச்சம் தவிர்

அநியாயம் செய்வதைக்கண்டு

அச்சம் கொள்

அடுத்தவரை கெடுப்பவனைக்கண்டு

அச்சம் தவிர்

உன் துன்பங்களையும், தோல்வியையும் கண்டு

அச்சம் கொள்

உன் மனம், பணத்திற்கு அடிமையாவதைக் கண்டு

அச்சம் தவிர்

உன் மனசாட்சி உன்னோடு கைகோர்க்கும் போது

அச்சத்தை அச்சமின்ற அனுப்பி விடுங்கள்

கையில் தன்னம்பிக்கை வாளை ஏந்தி விடுங்கள்

அச்சம் என்பது மடமையன்றோ

அச்சமுடையவன் பகலிலும் பயம் கொள்பவன்

அச்சத்தை மச்சமாக நினைப்பவன் வாழ்வதில்லை

அச்சத்தை துச்சமாக கொள்பவன்

மரணத்திலும் இறப்பில்லை.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

வாழ்க்கை

Posted by Kaviulagam | இயற்கை, பொதுகவிதை | Monday 17 August 2009 9:49 AM

வாழ்க்கை குழந்தைகளுக்கு விளையாட்டு

வாலிபனுக்கு அது ஒரு வசந்தம்

குடும்பஸ்தனுக்கு அது ஒரு போராட்டம்

வயோதிகனுக்கு அது ஒரு தெளிந்த நீரோடை.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

Page 5 of 11« First...3456710...Last »



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!