எதிர்பார்ப்பு
பூமியின் எதிர்பார்ப்பு நான்கு பருவங்கள்
ராகங்களின் எதிர்பார்ப்பு ஸ்வரங்கள்
இரவின் எதிர்பார்ப்பு பகல்
துன்பத்தின் எதிர்பார்ப்பு இன்பம்
திருமணத்தின் எதிர்பார்ப்பு குழந்தை
அல்லியின் எதிர்பார்ப்பு சந்திரன்
அன்பின் எதிர்பார்ப்பு நற்குணங்கள்
இதயத்தின் எதிர்பார்ப்பு உன்னை
போல் சிந்திக்க வேண்டுமென்று
இறுதியில் எதிர்பார்ப்பு இறையடி
எதிர்பார்ப்புகள் நம் கையில் – எதிர்பாராது
நடப்பது இறைவன் செய்கையில்
கடமையைச் செய்வோம்
பலனை எதிர்பாரோம்.






