இளைய சமுதாயமே!
இளைய சமுதாயமே!
இதய பெட்டகத்தில்
இளைய வேகத்தில்
இணையிலா காதலில்!
இன்பம் காணவா
இவ்வுலகில் நீ பிறந்தாய்
கிடைக்பதற்கரியா பொக்கிஷம் உன் இளமை
கவிதையிலும் கன்னியிலும்
போதையிலும் தவறான பாதையிலும்
செல்லவா உன் கால்கள்
சுவடுகளை பின்பற்றி
முன்னோக்கி செல்
காதலில் கவிகிடைக்கும்
கன்னியிடம் உன் முகம் மறையும்
இதுதானா தாயிற்கும்
தாய் நாட்டிற்கும் நீ
செய்யும் நன்றிகடன்
முகச்சுருக்கத்திலும் காதலியாய் மனைவி
காலம் உனக்காக – விட்டால் அது
காத்திருக்காது நமக்காக.






