நம்மால் முடியும்

Posted by Kaviulagam | பொதுகவிதை | Monday 19 October 2009 1:22 AM

நீ நானெனில் உதடுகள் ஒட்டாது

நாமெனில் அது பிரியாது

பிரிந்த விரல்கள் ஒருகையாகும்

அது பொருளை எடுக்கும்

பல்வேறு பாதைகளாகும் – ஆனால்

ஒரு ஊரின் வழியாகும்

பஞ்சபூதங்கள் ஐந்து ஆகும் – எனினும்

மக்களுக்கே உதவும்

பலப்பொருட்கள் ஒன்று சேரும்

அது நல்உணவாகும்

மனித மனங்கள் நல்சிந்தனை

செயல்களில் ஒன்று பட்டுவிட்டால்

அது நம்மால் முடியாது

என்று ஒன்று உண்டோ?

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (2 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

நம் நாடு

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம், பொதுகவிதை | Sunday 18 October 2009 11:31 PM

விஞ்ஞான வளர்ச்சி கண்டோம்

மெய்ஞான உயர்ச்சி கொண்டோம்

கல்வியில் உயர்வு பெற்றோம்

பொருளாதார சிறப்பு உண்டோம்

தொழில் வளங்கள் புரிந்தோம்

நிலவளங்கள் அதிகரித்தோம்

ஓய்வின்றி உழைக்க அறிந்தோம்

ஒப்பிலா பாரதத்தில் பிறந்தோம்

ஓங்கி பாரில் உயர்வோம் – இனும்

விந்தைகள் பல புரிவோம்.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

பெற்றோர்

Posted by Kaviulagam | சமுதாயம், பொதுகவிதை | Saturday 17 October 2009 12:04 AM

நாம் சந்தோஷமாக சுமந்தோம்

மகிழ்ச்சியாக வளத்தோம்

இன்பமான கல்வி அளித்தோம்

சுகமான நல்வழி சொல்லித் தந்தோம்

இனிமையான மணம் முடித்தோம்

கனியான பேரக்குழந்தைகளை ருசித்தோம்

அவர்கள் நல்லதொரு குடும்பமாக

வாழ்வதை நாம் ரசிப்போம்

வட்டியாக நாம் அவர்களிடம்

எதிர்பார்ப்பதை தவிர்ப்போம்

சுமையின்றி அவர்களை

சுகமாக வாழவிடுவோம்.

VN:F [1.8.3_1051]
Rating: 9.0/10 (3 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

Page 1 of 712345...Last »



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!