உற்சாகம்

Posted by Kaviulagam | பொதுகவிதை | Thursday 31 December 2009 7:40 AM

ஊட்டச்சத்து மாத்திரையிலா

உண்மையான உழைப்பிலா

இன்னல்களை இடிப்பதிலா

இனிமையான இசையிலா

கனிவான மழலை கேட்பதிலா

கல்நெஞ்சமாய் அமர்ந்திருப்பதிலா

கவலையோடு இருப்பதிலா

கண்கள் நற்காட்சியை காண்பதிலா

சோம்பேறியாய் பேசுவதிலா

சிறகைவிரிக்கும் பட்டாம் பூச்சிலா

துன்பம் தனக்குமட்டும் என்பதிலா

துயர் துடைப்போர் கைகளிலா

தடைகளை தாண்டுவதிலா

தன்னம்பிக்கை குறைவதிலா

உற்சாகம் உள்ளத்திலிருப்பதிலா

உண்மை புரியாது வெளியில் தேடுவதிலா

உற்சாகம் உற்சாகமாக இருக்க

உற்சாகமாக உள்ளத்தை தா உற்சாகத்திற்கு.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

ஏழை

Posted by Kaviulagam | பொதுகவிதை | Wednesday 30 December 2009 7:40 AM

ஏழை பிறப்பதில்லை உருவாகிறன்

கோழையில்லை வீரமாகிறான்

தாழை மடலா நீ வாசம் வீசு

தன்னம்பிக்கை கொண்டுவிடு

தளராது நடைபோடு

சோம்பலை தவர்த்திடு

சுறுசுறுப்பாக பழகிவிடு

சுயதொழில் செய்

சுத்தமாய் இருந்துவிடு

சத்தியமாய் நடந்துவிடு

தவறுகளை திருத்திவிடு.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

நா

Posted by Kaviulagam | பொதுகவிதை | Tuesday 29 December 2009 11:03 PM

நா வாயிற்குள் அடக்கம்

நாவன்மை சொல்லிற்குள் அடக்கம்

நா நயம் நாவிற்குள் அடக்கம்

நா அசைந்தால் நானிலம் அடக்கம்

நா மடிந்தால் சொற்கள் அடக்கம்

நா நீண்டால் நெஞ்சம் அடக்கம்

நா, நீயெனில் அன்பு அடக்கம்

நாம் என்பதில் உலகமே அடக்கம்.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

Page 1 of 41234



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!