பிராத்தனை
உனக்காக பிராத்தனை செய்தால்
அது புள்ளிமானை வேட்டையாடும் புலி போல
உன் குடும்பத்திற்காக பிரார்த்தனை
செய்தால் அது தேனீக்கள் போல
உன் உறவிற்காக பிரார்த்தனை
செய்தால் அது காக்கை போல
உன் நட்பிற்காக பிரார்த்தனை
செய்தால் அது கிளிகள் போல
உன் காதலுக்காக பிரார்த்தனை
செய்தால் அது புறாக்கள் போல
ஆனால் உலகிற்காக பிரார்த்தனை
செய்தால் அது வாடிய வயலுக்கு மழை போல
உன் எதிரிக்காக பிரார்த்தனை செய்தால்
கோழி கூட்டில் பருந்து போல
பகைவனுக்கு அருள்வாய் நன்நெஞ்சே!
நல் எண்ணங்களை அவன் இதயத்தில் விதைக்க.






