முதுமை
இளமையை அசைபோடும்
இன்பகீதம்
இனிய பேரக்குழந்தைகளின்
இனியநாதம்
இவ்வுலக அனுபவத்தின்
இதமான வேதம்
இன்ப துன்பங்களின்
இகமான பாதம்
இருவரும் சுகமாக
பரிமாறும் சாதம்
இயலாமை வந்தாலும்
இல்லை சோககீதம்
இதமாக நடந்து பாதையில்
ஆறும் சுப்ரபாதம்
இனிவரும் காலங்களில்
முதுமை அலை
இனிமையாய் மோதும்
இளசுகளை புரிந்து
நடந்து கொண்டால் போதும்
முதுமையும் ஓரு வசந்தகாலம்.







முதுமையில் அனுபவிக்க வேண்டிய இனிமையான செயல்களை அழகாக சொல்லியதற்கு மிக்க நன்றி…
முதுமை எனும் அரக்கன் பிடியிலே
வதங்கி வெதும்பி வாழ்ந்திடும் வேளையிலே
விடுதலை வருமா …இல்லை
விடுமுறையாவது வருமா என
ஏங்கிக்கிடக்கும் காலையிலே
எங்கிருந்தோ வந்த தென்றல்
இதமாக என்னைத் தழுவியது போல
ஆறுதல் கூறி அரவணைக்குமுங்கள்
அற்புதக் கவிதைக்கு என்
இதயம் கூறும் பாராட்டு.
சுப்பு ரத்தினம்.
அழகான வர்ணனை. பாராட்டுக்கள். நன்றி