புத்தாண்டு
வாசமலர்கள்
வாசலில் வரவேற்க
வசந்தம் வந்துநிற்க
வழி ஒன்று பிறந்திருக்க
வாழ்விங்கு சிறந்திருக்க
வையகம் பயமின்றி
கையோடுகை கோர்த்து
மெய்யன்போடு இதயம் மலர்ந்து
துக்கங்களும் துயரங்களும்
துக்கில் தொங்கிட
சமரசம் அதுவே தேசத்தின்
பழரசம் பாசக்கயிறுகள்
இறுகட்டுமே என்றென்றும்
மனிதநேயத்தோடு
இறையருளை வணங்கி
இவ்வையகம் அகத்தில்
நிம்மதியோடு இருக்க பிறக்கட்டும்.






