மனிதன்

Posted by Kaviulagam | இயற்கை | Sunday 28 March 2010 1:00 AM

காலம் பொன் போன்றது

கடமை கண் போன்றது

கற்பனையாயினும் சிறப்பானது

மனிதர்களே தெய்வமான காலமது

மனிதப்பண்புகள் நிறைந்தது

புனிதமான வாழ்வுகள் தந்தது

பயிர்களையும் பிற உயிர்களையும் நேசித்தது

இறைவனே நேரில் வந்தது

மனிதம் புனிதமான நேரமது

வாழ்வின் அர்த்தம் தானது

எல்லோரும் இன்புற்றிருந்தது

ஒழுக்கம் கட்டுபாடு தேச

ஓற்றுமை தந்தது மீண்டும்

நிறைவேர கடவுள் தர

வேண்டும் நல்வரமது

மனிதனாக பிறப்பது அரிது

மனிதமாக சாவது புனிதமது.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (2 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +3 (from 3 votes)
  • Share/Bookmark

பிடிவாதம்

Posted by Kaviulagam | இயற்கை, பொதுகவிதை | Thursday 25 March 2010 1:00 AM

வாதம் வம்பு பண்ணக்கூடாது – பிடி

வாதம் வம்பு பண்ணக்கூடாது

வாதம் செய் – நல்ல

லட்சியங்களுக்கு – பிடி

வாதம் கொள் அதை அடைய

வாதம் செய் – நல்ல

செயல்களுக்கு – பிடி

வாதம் செய் அதை

நிறைவேற்றுவதற்கு

வாதம் செய் – நல்ல

எண்ணகளை வளர்க்க – பிடி

வாதம் செய் அதை வளர்த்துக்கொள்

வாதம் செய் உயர்நிலை அடைய – பிடி

வாதம் செய் பண்போடு வாழ.

VN:F [1.8.3_1051]
Rating: 8.7/10 (3 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +3 (from 3 votes)
  • Share/Bookmark

முதுமை

Posted by Kaviulagam | இயற்கை, பொதுகவிதை | Monday 22 March 2010 1:00 AM

இளமையை அசைபோடும் இன்பகீதம்

இனிய பேரக்குழந்தைகளின் இனிய நாதம்

இவ்வுலக அனுபவத்தின் இதமான வேதம்

இன்ப துன்பங்களின் இதமான பாதம்

இருவரும் சுகமாக பரிமாறும் சாதம்

இயலாமை வந்தாலும் இல்லை சோககீதம்

இனிவரும் காலங்களில் முதுமையலை இனிமையாய் மோதும்

இளசுகளை புரிந்து நடந்துக் கொண்டால் போதும்

முதுமையும் ஒரு வசந்தகாலம்.

VN:F [1.8.3_1051]
Rating: 7.7/10 (3 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +2 (from 2 votes)
  • Share/Bookmark

Page 1 of 812345...Last »



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!