கவலை
கவலையும் ஆசையும்
உடலும் உயிரும் கோல
பெண் குழந்தை பிறந்தால் கவலை
ஆண் குழந்தை பிறந்தால் ஆசை
பட்டம் முடித்து வேலை இல்லை கவலை
படித்ததற்கு ஏற்ற வேலை ஆசை
வரதட்சணை தரவேண்டுமே கவலை
சக்திக்கு மீறி பெண்ணை தருவது ஆசை
இருப்பதை வைத்து சந்தோஷப்பட்டால்
உயர்வுக்கு வழி நேர்மையானால்
கவலைகள் ஆசைகளாகி உயிர் கொடுக்கும்
கவலைகள் காலில் அணியும் செருப்பு
வெளியில் விட்டு விடலாம்
முயற்சியுடன் உள்ளே நுழையலாம்
உண்மையாக உழைக்க.






