சிக்கனம்

Posted by Kaviulagam | இயற்கை, பொதுகவிதை | Wednesday 7 April 2010 1:00 AM

விரலுக்கேற்ற வீக்கம்

வரவிற்கேற்ப செலவு

உழைப்பிற்கேற்ற ஊதியம்

உரத்திற்கேற்ற விளைச்சல்

போதும் என்ற மனமே

சிக்கனமே சிறப்பான வாழ்வு

இருப்பதைக் கொள்வதில் மனநிறைவு

அகலக்கால் தலைகால் தெரியாது

ஆழம் தெரியாது காலை விடுவதா

ஆடம்பரம் பம்பரமாய் சுழன்று

உன்னை பாரமாய் சுமக்க வைக்கும்

எளிமையிலும் இனிமை நிம்மதி இருக்கும் இதை

உணர்ந்தால் உனக்கு வாழ்வு என்றுமே மணக்கும்.

VN:F [1.8.3_1051]
Rating: 7.7/10 (9 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +7 (from 7 votes)
  • Share/Bookmark

செய்

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம் | Sunday 4 April 2010 1:00 AM

செய் ஏதாவது செய்

அன்பை நடவு செய்

பண்பை வளரச் செய்

ஒழுக்கத்தை உயரச் செய்

உண்மையை விழிக்கச் செய்

வறுமையை ஒழிக்கச் செய்

வரலாற்றில் பெயரைப் பதிவு செய்

வரும் துன்பங்களை ஓடச் செய்

நல் மனிதர்களை வாழச் செய்

நன்மை செய்து நல்லதைச் செய்

தேவையற்றதை அழிக்கச் செய்

தீமைகளை நீக்க முடிவு செய்

தினமும் இறைவனை வணங்கச் செய்

சுத்தமான உணவுகளை உண்ணச்செய்

சிறப்பாக இருக்க முயற்சி செய்

சிந்தனைகளை வளர்க்கச் செய்

குழந்தைகளிடம் உறவை நேசிக்கச் செய்

இளைஞர்களிடம் தேசப்பற்றைச் செய்

முதியோர்களை மதிக்கச் செய்

முன்னேற்றப் பாதையை தேர்வு செய்

ஏற்றத் தாழ்வை நீக்கச் செய்

ஏமாற்றத்தை மாற்றச் செய்

அன்னை பூமியை நினைவு செய்

ஆனந்த பூக்கள் பூக்கச் செய்

அனைவரும் ஒன்றாக கை கோர்க்கச்செய்.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (3 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +3 (from 3 votes)
  • Share/Bookmark

ஆசிரியர்

Posted by Kaviulagam | இயற்கை | Thursday 1 April 2010 1:00 AM

ஆசிரியர் பணி

ஆண்டவன் பணி

அறிவின் தீனி

ஆற்றலின் பாணி

அன்பின் கனி

அடிச்சுவடின் தேனி

அடுத்தவரை ஏற்றும் ஏணி

அதற்கீடுல்லை இனி

மாணவனின் பொறுப்பு

மாடான உழைப்பு

மதிக்கும் பண்பு

மறக்காத நினைப்பு.

VN:F [1.8.3_1051]
Rating: 5.5/10 (8 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +4 (from 4 votes)
  • Share/Bookmark

Page 3 of 3123



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!