அறத்துப்பால் – வழிபாடு
மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
விளக்கம் : மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோறின்
புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்
மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
விளக்கம் : மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோறின்
புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்
திருவே நினைக்காதல் கொண்டேனே – நினது திரு
உருவே மறவா திருந்தேனே – பல திசையில்
தேடித் திரிந்திளைத் தேனே – நினக்கும் மனம்
வாடித் தினங்களைத் தேனே – அடி, நினது
பருவம் பொறுத்திருந் தேனே – மிகவும் நம்பிக்
கருவம் படைத்ததிருந் தேனே – இடைம்நடுவில்
பையச் சதிகள்செய் தாயே – அதனிலுமென்
மையல் வளர்தல்கண் டாயே – அமுதமழை
பெய்யக் கடைக்கண்நல் காயே – நினதருளில்
உய்யக் கருணைசெய் வாயே – பெருமைகொண்டு
வையந் தழைக்கவைப் பேனே – அமரயுகஞ்
செய்யத் துணிந் துநிற் பேனே – அடியெனது
தேனே, என திரு கண்ணே – ஏனையுகந்து
தானே வந்திருப் – பெண்ணே!
தேடி சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிறையெனப் பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ!
- மாகவி பாரதியார்
| ||
