புதுமை பெண்கள்

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம் | Thursday 13 May 2010 1:00 AM

அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு

ஆணாதிக்கம் செலுத்துபவரை தவிர்ப்பதற்கு

இல்லத்தின் தேவைகளை பகிர்வதற்கு

ஈன்ற தாய்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதற்கு

உயர்ந்தநிலை ஒவ்வொன்றிலும் அடைவதற்கு

ஊக்கம் கொண்டு எதையும் செய்வதற்கு

எடுத்த காரியம்யாவிலும் வெற்றி கொள்வதற்கு

ஏணியாய் விண்ணிலும் கால் பதிப்பதற்கு

ஐயமின்றி அனைத்தையும் அறிவதற்கு

ஓவ்வொரு துறையிலும் முதலாவதாய் நிற்பதற்கு

ஓங்கி மங்காது என்றும் புகழ் பெறுவதற்கு

ஓளவையே எடுத்துக்காட்டாய் அக்கல்வி சான்றிற்கு

எஃகு போன்ற மன உறுதி எந்நிலையிலும் மாறாததற்கு

கடுகிலும் இனி நுழைந்து நீ வெளிவருவாய் என்பதற்கு

காலம் தெளிவடைய வைத்திருக்கிறது நமக்கு

தொடர்ந்து நடைபோடு ஈடு இணையில்லை என்றும் உனக்கு.

VN:F [1.8.3_1051]
Rating: 7.2/10 (6 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +4 (from 4 votes)
புதுமை பெண்கள்7.2106
  • Share/Bookmark


Related Posts

  1. புகையிலை
  2. வா இளைஞனே! வா
  3. பெண்ணே!
  4. எதிர்காலம்
  5. மங்கை

1 Comment »

  1. Comment by Tamilselvan — May 13, 2010 @ 3:08 PM

    Fantastic kavithai.

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

 




free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!