மனமே

Posted by Kaviulagam | பாரதியார் பாடல்கள் | Wednesday 30 June 2010 1:00 AM

கண்ணன் திருவடி

எண்ணுக மனமே

திண்ணம் அழியா

வண்ணந் தருமே.

தருமே நிதியும்

பெருமை புகழும்

கருமா மேனிப்

பெருமா னிங்கே.

இங்கே யமரர்

சங்கந் தோன்றும்

மங்கும் தீமை

பொங்கும் நலமே.

நலமே நாடிற்

புலவீர் பாடீர்

நிலமா மகளின்

தலைவன் புகழே.

புகழ்வீர் கண்ணன்

தகைசே ரமரர்

தொகையோ டசுரப்

பகைதீர்ப் பதையே.

தீர்ப்பான் இருளைப்

போர்ப்பான் கலியை

ஆர்ப்பா ரமரர்

பார்ப்பார் தவமே.

தவறா துணர்வீர்

புவியீர் மாலும்

சிவனும் வானோர்

எவரும் ஒன்றே.

ஒன்றே பலவாய்

நின்றோர் சக்தி

என்றுந் திகழும்

குன்றா வொளியே.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

வேண்டுவன

Posted by Kaviulagam | பாரதியார் பாடல்கள் | Tuesday 29 June 2010 1:00 AM

மனதி லுறுதி வேண்டும்

வாக்கினிலே யினிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்

கைவசமாவது விரைவில் வேண்டும்

தனமும் இன்பமும் வேண்டும்

தரணியிலே பெருமை வேண்டும்

கண் திறந்திட வேண்டும்

கா ரியத்தி லுறுதி வேண்டும்

பெண் விடுதலை வேண்டும்

பெரிய கடவுள் காக்கவேண்டும்

மண் பயனுற வேண்டும்

வானகமிங்கு தென்பட வேண்டும்

உண்மை நின்றிட வேண்டும்.

ஓம் ஓம் ஓம் ஓம்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

மனத்திற்குக் கட்டளை

Posted by Kaviulagam | பாரதியார் பாடல்கள் | Monday 28 June 2010 1:00 AM

பேயா யுழலுஞ் சிறு மனமே

பேணா யென்சொல் இன்றுமுதல்

நீயா யொன்றும் நாடாதே

நினது தலைவன் யானேகாண்

தாயாம் சக்தி தாளினிலும்

தரும மெனயான் குறிப்பதிலும்

ஓயா தேநின் றுழைத்திடுவாய்

உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

Page 1 of 712345...Last »



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!