இல்வாழ்க்கை

Posted by Kaviulagam | திருக்குறள் | Sunday 29 May 2011 1:00 AM

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.

விளக்கம் : தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள்

கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று

வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு

இணையாக வைத்து மதிக்கப்படுவான்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

ஊடலுவகை

Posted by Kaviulagam | திருக்குறள் | Thursday 26 May 2011 1:00 AM

புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு

நீரியைந் தன்னார் அகத்து.

விளக்கம் : நிலத்தோடு நீர் கலந்தது போல அன்புடன் கூடியிருக்கும்

காதலரிடத்தில் ஊடல் கொள்வதை விடப் புதிய உலகம் வேறொன்று

இருக்க முடியுமா?

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

புலவி நுணுக்கம்

Posted by Kaviulagam | திருக்குறள் | Tuesday 24 May 2011 1:00 AM

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்

காட்டிய சூடினீர் என்று.

விளக்கம் : கிளையில் மலர்ந்த பூக்களைக் கட்டி நான் அணிந்து

கொண்டிருந்தாலும், வேறொருத்திக்குக் காட்டுவதற்காகவே

அணிந்திருக்கிறீர் எனக்கூறி சினம் கொள்வாள்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

Page 1 of 41234



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!