குடிமை
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
விளக்கம் : பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த
குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு
இடம் தரமாட்டார்கள்.

கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தாற் சுற்றப் படும்.
விளக்கம் : வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும்
உடையவனை அடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து
கொண்டேயிருப்பார்கள்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
விளக்கம் : மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை
ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.
| ||