வெகுளாமை

Posted by Kaviulagam | திருக்குறள் | Tuesday 30 August 2011 1:00 AM

சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

ஏமப் புணையைச் சுடும்.

விளக்கம் : சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும்

தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும்

தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

நாட்டுக் கல்வி

Posted by Kaviulagam | பாரதியார் பாடல்கள் | Saturday 27 August 2011 1:00 AM

விளக்கி லேதி ரி நன்கு சமைந்தது

மேவுவீ ர் இங்கு தீக்கொண்டு தோழரே!

களக்க முற்ற இருள்கடந் தேகுவா ர்

காலைச் சோதிக் கதிரவன் கோவிற்கே

துளக்க முற்றவிண் மீனிடம் செல்லுவா ர்

தொகையில் சோ¢ந்திட உம்மையும் கூவினா ர்

களிப்பு மிஞ்சி ஒளியினைப் பண்டொரு

காலம் நீர்சென்று தேடிய தில்லையோ?

அன்று நுங்கள் கொடியினை முத்திட்டே

ஆசை யென்றவிண் மீன் ஒளிர் செய்ததே;

துன்று நள்ளிருள் மாலை மயக்கத்தால்

சோம்பி நீரும் வழிநடை பிந்தினீர்

நின்ற விந்தன நுங்கள் விளக்கெலாம்

நீங்கள் கண்ட கனாக்களெல் லாம் இசை

குன்றித் தீக்குறி தோன்றும் இராப்புட்கள்

கூவு மாறொத் திருந்தன காண்டிரோ.

இன்னு மிங்கிருள் கூடி யிருப்பினும்

ஏங்கு கின்ற நரகத் துயிர்கள்போல்

இன்னு மிங்கு வனத்திடை காற்றுத்தான்

ஓங்கும் ஓதை இருந்திடும் ஆயினும்

முன்னைக் காலத்தின் நின்றெழும் பேரொலி

முறை முறைபல ஊழியின் ஊடுற்றே

பின்னை இங்குவந் தெய்திய பேரொலி

போல மந்திர வேதத்தின் பேரொலி.

“இருளை நீக்கி ஒளியினைக் காட்டுவாய்,

இறப்பை நீக்கி, அமிர்தத்தை ஊட்டுவாய்”

அருளும் இந்த மறையொலி வந்திங்கே

ஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்திருப் பீர்தமைத்

தெருள் உறுத்தவும் நீர்எழு கில்லிரோ?

தீய நாச உறக்கத்தில் வீழ்ந்தநீர்

மருளை நீக்கி அறிதிர் அறிதிரோ

வான் ஒளிக்கு மகாஅரி யாம்என்றே.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

வாய்மை

Posted by Kaviulagam | திருக்குறள் | Wednesday 24 August 2011 1:00 AM

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று.

விளக்கம் : செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும்

நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல்

கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும்.

VN:F [1.8.3_1051]
Rating: 0.0/10 (0 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

Page 1 of 41234



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!