இதயம்
கையளவு இதயம்
கடலளவு ஆசை உதயம்
அன்பிற்கு பணியும்
அகிம்சைக்கு உதவும்
தீவிரவாதத்தை எதிர்க்கும்
பாசத்திற்கு உருகும்
பண்பாட்டிற்கு நிமிரும்
பகைவர்க்கும் அருளும்.
கையளவு இதயம்
கடலளவு ஆசை உதயம்
அன்பிற்கு பணியும்
அகிம்சைக்கு உதவும்
தீவிரவாதத்தை எதிர்க்கும்
பாசத்திற்கு உருகும்
பண்பாட்டிற்கு நிமிரும்
பகைவர்க்கும் அருளும்.
எண்ணங்கள் உயர்வானால் வெண்மை
உள்ளம் ஊமையானால் கறுமை
இதயம் பரிமாறினால் ரோஜா
கண்கள் கோபமானால் சிவப்பு
நேசான நட்பானால் பசுமை
நெஞ்சில் நின்ற உறவானால் மஞ்சள்
உலகமே வானக் கூறையானால் நீலம்.
புகழுக்கு மயங்குபவன் ஏமாளி
புரிந்துக் கொள்ளாதிருப்பவன் ஏமாளி
புரியாமல் தவிப்பவன் ஏமாளி
மற்றவரை புரிந்து தன்னை
உணர்பவன் ஏமாளியாவதில்லை.
| ||
