புதுமை பெண்கள்

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம் | Thursday 13 May 2010 1:00 AM

அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு

ஆணாதிக்கம் செலுத்துபவரை தவிர்ப்பதற்கு

இல்லத்தின் தேவைகளை பகிர்வதற்கு

ஈன்ற தாய்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதற்கு

உயர்ந்தநிலை ஒவ்வொன்றிலும் அடைவதற்கு

ஊக்கம் கொண்டு எதையும் செய்வதற்கு

எடுத்த காரியம்யாவிலும் வெற்றி கொள்வதற்கு

ஏணியாய் விண்ணிலும் கால் பதிப்பதற்கு

ஐயமின்றி அனைத்தையும் அறிவதற்கு

ஓவ்வொரு துறையிலும் முதலாவதாய் நிற்பதற்கு

ஓங்கி மங்காது என்றும் புகழ் பெறுவதற்கு

ஓளவையே எடுத்துக்காட்டாய் அக்கல்வி சான்றிற்கு

எஃகு போன்ற மன உறுதி எந்நிலையிலும் மாறாததற்கு

கடுகிலும் இனி நுழைந்து நீ வெளிவருவாய் என்பதற்கு

காலம் தெளிவடைய வைத்திருக்கிறது நமக்கு

தொடர்ந்து நடைபோடு ஈடு இணையில்லை என்றும் உனக்கு.

VN:F [1.8.3_1051]
Rating: 7.2/10 (6 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +4 (from 4 votes)
  • Share/Bookmark

கோபம்

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம் | Monday 10 May 2010 1:00 AM

நவரசங்களில் எல்லோரிடமும் நாயகன்

நன்மை என்றுமே தராத பேயவன்

நடக்கும் பின்விளைவுகளை அறியாதவன்

நடந்த பின்பே யோசிக்கும் மடையன்

நாளெல்லாம் நிழலாகித் தொடர்பவன்

நமக்கும், பிறருக்கும் சேரவிடா துருவமவன்

நல்லவனையும், தீயவனாக்கும் கயவன்

நளிந்த பேரை நசுக்கிவிடும் கொடியவன்.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (5 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +5 (from 5 votes)
  • Share/Bookmark

மலர்கள்

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம், பொதுகவிதை | Friday 7 May 2010 1:00 AM

மனதை கொள்ளை கொள்ளும் நளினம்

மணத்தோடு மனம் பரவும் குதூகலம்

இனமெனும் பலவகையும் மின்னும்

இளமையெனும் தென்றலில் தவழும்

வாசமற்ற நிறத்தாளும் அசத்தும்

வண்ண எழிலான சூலோடும் சேரும்

கவர்ச்சியான போர்வையோடும் அணைக்கும்

கண்டு மகிழச் செய்யும் பரவசம்

மருந்தாகி புண்ணாற்றும் தாயுள்ளம்

அருவிருத்தாகி அரவணைத்து தாலாட்டும்

விநாடி வாழ்வெனினும் மலர்ந்த முகம்.

VN:F [1.8.3_1051]
Rating: 6.9/10 (8 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +4 (from 4 votes)
  • Share/Bookmark

Page 2 of 5112345102030...Last »



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!