கடன்

Posted by Kaviulagam | இயற்கை, பொதுகவிதை | Tuesday 22 December 2009 11:27 PM
பெற்ற கடன்
பிள்ளையின் பாசத்திலா
பிறந்த கடன்
பிறப்பின் பாவத்திலா
சுற்றத்தார் கடன்
சுகமான சுமையிலா
மற்ற கடன்
மனிதன் துக்கத்திலா
உற்ற கடன்
உடன் பிறப்பிலா
பற்றுக் கடன்
பந்தங்களின் சுகத்திலா
பற்றற்று கடன்
கொள்வது கடவுளிடத்திலா
பற்றின்றி பெற்ற பொருளை
பற்றுவைப்பதே நீ பெற்ற பற்றுகடன்.

பெற்ற கடன்

பிள்ளையின் பாசத்திலா

பிறந்த கடன்

பிறப்பின் பாவத்திலா

சுற்றத்தார் கடன்

சுகமான சுமையிலா

மற்ற கடன்

மனிதன் துக்கத்திலா

உற்ற கடன்

உடன் பிறப்பிலா

பற்றுக் கடன்

பந்தங்களின் சுகத்திலா

பற்றற்று கடன்

கொள்வது கடவுளிடத்திலா

பற்றின்றி பெற்ற பொருளை

பற்றுவைப்பதே நீ பெற்ற பற்றுகடன்.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

லட்சியம்

Posted by Kaviulagam | இயற்கை, பொதுகவிதை | Monday 21 December 2009 11:03 PM

வான் என்றால்

ஒரு நிலவு தேவை

வயல்கள் என்றால்

பசுமை அவசியம்

ஆறு என்றால் செல்ல

படகு துடுப்பு முக்கியம்

பயணம் என்றால்

ஊரின் பெயர் தேவை

இல்லம் எனில்

ஒரு வாசல் அவசியம்

இரவு என்றால் வெளிச்சம்

பெற ஒரு பகல் தேவை

மனிதனாக பிறந்த உனக்கு

லட்சியம் அவசியத் தேவை

லட்சியத்தை அலட்சியம் செய்யும் போது

லட்சியம் உன்னை அலட்சிய படுத்திவிடும்.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

கல்வி

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம் | Friday 18 December 2009 11:15 PM

என் கிராமத்து சகோதரியே

சாலைகள் கூட நேரில்லையே

மேடும் பள்ளமும் சரியில்லையே – உன்

வாழ்க்கையை சரிசெய்வது கல்வியே

அதை முழுமையாய்ப் பெறுவது உன் கையிலே

கல்வியிலா களர் நிலமாகாதே

கையளவாக கற்றுக்கொள்

கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark




free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!