புகழ்

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம், பொதுகவிதை | Saturday 19 September 2009 10:28 PM

தானே புகழ்ந்து கொள்வது

இகழ் கௌரவம்

தன்னை மற்றவர்கள் புகழ்வது

விளம்பர கௌரவம்

தன்னை மற்றவர்கள் புகழ வேண்டும்

என்பது வறட்டு கௌரவம்

தன் புகழுக்கு நிகரில்லை

என்பது ஆணவ கௌரவம்

தன் புகழுக்காக மற்றவரை

பலியாக்குவது வெறி கெளரவம்

தன் புகழை தானே உண்டாக்குவது அகௌரவம்

தன் புகழ் மறைத்து மற்றவரைப் புகழ்வது

புகழிற் காண கௌரவம்.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

வெற்றி படிகள்

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம், பொதுகவிதை | Friday 18 September 2009 10:34 PM

வெற்றி படிகட்டை தொட

வெகு தூரம் நட தோழா

வானம் உன்கை தொடுமா

வண்ண சிறகு முளைக்கட்டும் தோழா

கடலை உன் கால் கடக்குமா

உடலை துடுப்பாக்கு தோழா

மலையை உன்கை நகர்த்துமா

மன உறுதியைவிட மலை கடுகு தோழா

வழியில் கண்ணாடி துகள்கள்

உன் பாதை சுவடுகளாகட்டும் தோழா

புன்னகையால் வென்றிடு தோழா

சோதனையும், வேதனையும்

நாணயத்தின் இருபக்கம் தோழா

இரண்டு பக்கங்கள் இருந்தால்

அது ஒன்றாக நாணயமாகும் தோழா

இரவு, பகல் இரண்டுதாண்

அது ஒரு நாளன்றோ – அந்த

ஒரு நாள் வெகுதூரம் இல்லை தோழா

நம்பிக்கைக் கொள்!

வாழ்வாய்! வாழவும் வைப்பாய்!

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

தானம்

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம் | Thursday 17 September 2009 10:42 PM

பசிக்கு உணவுவிடுவது அன்னதானம்

செவிக்கு உணவு அளிப்பது கல்விதானம்

மனிதன் உணர வேண்டியது நிதானம்

இருப்பதைக் கொடுப்பது பிரதானம்

இழப்பிற்கு தருவது இரத்த தானம்

இறந்தபின் உதவுவது உறுப்புதானம்

யாகத்திற்களிப்பது கோதானம்

யாரோடும் சண்டையின்றி வாழ்வது சமாதானம்

மக்கள் புரிந்துக் கொண்டால் என்றுமே

மகிழ்ச்சி தானம்.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark




free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!