பேச்சு

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம் | Saturday 20 June 2009 12:39 AM

பேசுங்கள் நன்றாய், அளவாய்ப் பேசுங்கள்

பேசுங்கள் அன்பாய், அறிவாய்ப் பேசுங்கள்

பேசுங்கள் பயனாய், பண்பாய்ப் பேசுங்கள்

பேசுங்கள் மதிப்பாய், மரியாதையுடன் பேசுங்கள்

பேசுங்கள் புண்ணின்றி, கண்ணீர் வரவிடாது பேசுங்கள்

பேசுங்கள் மற்றவருக்கும், உதவியாய்ப் பேசுங்கள்

பேசுங்கள் உண்மையாய், அச்சமின்றிப் பேசுங்கள்

பேசுங்கள் எதிரிக்கும் தூக்கமும், துக்கமும் வரவிடாது பேசுங்கள்

பேசுங்கள் இனிமையாய், இன்பமாய்ப் பேசுங்கள்

பேசுங்கள் பற்களின் கட்டுப்பாட்டு அறையில்

நாவை அடக்கமாய் வைத்திருங்கள்

குறுக்கீடுகள் ஏன் குறுக்கிடப் போகின்றன

யாகாவாராயினும் நாகாக்க காக்க,

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

பிடித்தது

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம் | Saturday 20 June 2009 12:36 AM

அன்னையின் அன்புப் பிடித்தது

ஆண்டவனின் கருணைப் பிடித்தது

இந்தியராய்ப் பிறந்ததுப் பிடித்தது

ஈகை எண்ணம் என்றும் பிடித்தது

உறவோடு வாழ்வதுப் பிடித்தது

ஊரோடு ஒத்துப்போவது பிடித்தது

ஐயமின்றி வாழ்வது பிடித்தது

எல்லோரும் இன்புறுவது பிடித்தது

ஏற்ற இரக்கம் இல்லாதது பிடித்தது

ஒற்றுமையாய் இருப்பது பிடித்தது

ஓங்கி உயர நினைப்பது பிடித்தது

ஔவை மொழி நடப்பது பிடித்தது,

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

கடலலை

Posted by Kaviulagam | இயற்கை | Wednesday 17 June 2009 12:23 AM

மனதில் இறுக்கம் ஏற்படும் போதெல்லாம்

மனச்சுமையை இறக்கி வைக்கும் சுமைதாங்கி நீ

மனம் விட்டுப் பேச நல்ல துணை நீ

திங்களின் ஒளியில் மனதைமயக்கும் அழகி நீ

மனத்துயர் நீக்கி மகிழ்ச்சியளிக்கும் மழலை மொழி நீ

மனம் விரும்பியபடி தோன்றும் தோற்றம் நீ

மனதை மயக்கும் நுரைச்சிரிப்பழகி நீ

மனம்வாங்க எண்ணும் பல்பொருள் அங்காடி நீ

மஞ்சளும், சிவப்பும் சேரும் மாலை நேர மோகினி,

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

Page 51 of 51« First...1020304748495051



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!