செலவு

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம் | Saturday 26 September 2009 11:10 PM

வரவுக்குள் செலவானால் வரவு

வரவுக்கு மேல் செலவானால் செலவு

வரவின்றி செலவானால் களவு

வரவும் செலவும் சமமானால் நிலவு

வரவு அதிகமாகி செலவானால் அழிவு

வரவு குறைவாகி செலவானால் இழிவு

வரவு நிறைவாகி செலவு அளவானால் மகிழ்வு

வரவு நல்ல உறவானால் உயர்வு

வரவு நல்வரவு என்றானால்

என்றென்றும் நிறைவு.

VN:F [1.8.3_1051]
Rating: 7.5/10 (2 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

சுகம்

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம் | Friday 25 September 2009 10:38 PM

வாழ்க்கையில் தேடும்

ஒரே சுகம்

கொடுத்து வாழ்வதில்

மனம் சுகம்

எடுத்துப் பெறுவதில்

வரவில்லை சுகம்

தடுத்து நிறுத்துவதில்

தரவில்லை சுகம்

நான் வாழ்வதில்

பெறவில்லை சுகம்

நீ இருப்பதில்

நிறைவில்லை சுகம்

நாம் என்று இணைவதில்

தருவதோ சுகமோ சுகம்.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

மனந்திறத்தல்

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம் | Thursday 24 September 2009 12:28 AM

அன்னையின் அன்பு ஊஞ்சலில்

மனம் திறந்து ஆடலாம்

அப்பாவின் அறிவுத்திடலில்

ஆசைக்கல்வியை பேசலாம்

அண்ணனின் பாசவலையில்

அகிலத்தை பிடிக்கலாம்

அனைத்தையும் புரிந்து கொண்ட

நண்பனிடம் அளவோடு சொல்லலாம்

ஆண்டவனிடமே அனைத்தையும்

மனந்திறந்து சொல்லலாம்

அவனே நம் சுமைதாங்கி

அவனே நம் நீதிபதி.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark




free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!