எதிர்காலம்

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம் | Sunday 25 April 2010 1:00 AM

விழியில் உன் விழியில்

என் எதிர்காலம் உள்ளது

மொழியில் உன் மொழியில்

என் உயிர் உள்ளது

வழியில் உன் வழியில்

என் கால் சென்றது

பழியில் உன் பழி – யில்

நான் மணமுடிப்பது

கழியில் உன் கழியில்

நாமிருவர் ஊணுவது.

VN:F [1.8.3_1051]
Rating: 7.6/10 (8 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +5 (from 5 votes)
  • Share/Bookmark

மாமனிதன்

Posted by Kaviulagam | சமுதாயம், பொதுகவிதை | Saturday 17 April 2010 1:00 AM

எண்ணங்கள் உயர்வானால்

செயல்கள் உயர்வாகும்

செயல்கள் உயர்வானால்

ஏற்றங்கள் உருவாகும்

ஏற்றங்கள் உயர்வானால்

உள்ளங்கள் தெளிவாகும்

உள்ளங்கள் தெளிவானால்

உண்மைப் புலனாகும்

உண்மைத் தெரிந்தால்

உன்னை உணர்வாய்

உன்னை உணர்ந்தால்

உலகம் உன்னை மதிக்கும்

மதிக்கும் மனிதனானால்

நீ மனிதனில் மாமனிதனாவாய்

மாமனிதனானால் மகாத்மாவாய்.

VN:F [1.8.3_1051]
Rating: 8.3/10 (8 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +6 (from 6 votes)
  • Share/Bookmark

அழகு

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம் | Wednesday 14 April 2010 1:00 AM

ஆடம்பரமான உடையிலா

அன்பான பேச்சிலா

ஏற்றமான செல்வத்திலா

எளிமையான உபசரிப்பிலா

தோற்றமான நிறத்திலா

தோல் நிறமிலா குணத்திலா

ஆற்றலான செயலிலா

அகம்பாவமான நிலையிலா

மனித நேயமே மனிதர்க்கழகு

மற்றெதெல்லாம் மறையுமே

சூரியனைக் கண்ட பனிபோல்.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (6 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +6 (from 6 votes)
  • Share/Bookmark

Page 3 of 5112345102030...Last »



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!