காந்திஜி

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம் | Sunday 23 August 2009 11:20 PM

அண்ணல் போர் பந்தரில் பிறந்து

போரை விரும்பாத தியாகி

கரம்சந்த் காந்திஜி அன்பு கரம்

கொண்டு ஆங்கிலேயனை அடக்கிய யோகி

எலும்புக்கூடு உள்ளத்தில் எம் இந்திய

மக்களை அடைத்த சிறை கைதி

பொக்கை வாய் சிரிப்பில்

பொக்கிஷமான தேசத்தை பொத்திவைத்த

எங்கள் தேசப்பிதா நீங்கள் எப்பொழுது

உயிர்நீத்தீர்கள் உங்கள் இந்திய தேசமட்டுமல்ல

உலகதேசம் உள்ளவரை உங்களுக்கு

இறப்பேது அண்ணலே!

VN:F [1.8.3_1051]
Rating: 6.0/10 (2 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +2 (from 2 votes)
  • Share/Bookmark

தூது

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம் | Saturday 22 August 2009 12:12 AM

ஆதியில் அன்னம் தூது

அரசனால் புறா தூது

அடுத்தது கடித தூது

அறிவியலால் காது தூது

அணுவினால் கணினி தூது

அவளின் கண் தூது (ஆகுமா).

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

முடிவு

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம் | Friday 21 August 2009 10:50 PM

முடிவு முடிவு பெறாமல் செல்வது

நல்ல முடிவு தறாது

நல்ல முடிவு எடுப்பது நாம்மட்டும்

தனித்து செய்வது சரியாகாது

சரியாகாத முடிவு எடுக்க சிலநேரம்

தவறுவதால் அது தவறாகும்

தவறான முடிவுகள் தப்பான பாதையில்

செல்வதால் அது நன்மை தறாது

நன்மைதறாத முடிவுகள் மற்றவரைத்

துன்புறுத்துவதால் தீமையாகும்

தீமையான செயல்கள் தம்மையே அழிக்கவல்லது

தம்மையே அழிக்கும் செயல்களைச்

செய்யாது தனக்கும் தம்மைச் சார்ந்தோருக்கும்

பிறருக்கும் பயனளிக்கும் முடிவே சிறந்த முடிவாகும்.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark




free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!