தெரிந்து வினையாடல்
அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
சிறந்தானென் றேவற்பாற் றன்று.
விளக்கம் : ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை
அல்லாமல் வேறொருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில்
ஈ.டுபடுத்தக் கூடாது.

அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு.
விளக்கம் : உயிரும் உடலும்போல் அன்பும் செயலும்
இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
விளக்கம் : சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத்
தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த
அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது.
| ||