காவடிச் சிந்து
பச்சைத் திருமயில் வீரன்
அலங் காரன் கௌ மாரன் — ஒளிர்
பன்னிரு திண்புயப் பாரன், அடி
பணி சுப்பிர மணியர்க்கருள்
அணி மிக்குயர் தமிழைத்தரு
பக்தர்க் கெளியசிங் காரன் — எழில்
பண்ணு மருணாசலத் தூரன்
பச்சைத் திருமயில் வீரன்
அலங் காரன் கௌ மாரன் — ஒளிர்
பன்னிரு திண்புயப் பாரன், அடி
பணி சுப்பிர மணியர்க்கருள்
அணி மிக்குயர் தமிழைத்தரு
பக்தர்க் கெளியசிங் காரன் — எழில்
பண்ணு மருணாசலத் தூரன்
எங்கிருந்து வருகுவதோ — ஒலி
யாவர் செய்கு வதோ? — அடி தோழி
குன்றி னின்றும் வருகுவதோ — மரக்
கொம்பி னின்றும் வருகுவதோ — வெளி
மன்றி னின்று வருகுவதோ — என்றன்
மதிம ருண்டிடச் செய்குதடி — இஃது
அலையொ லித்திடும் தெய்வ — யமுனை
யாற்றி னின்றும் ஒலிப்பதுவோ — அன்றி
இலையொ லிக்கும் பொழிலிடை நின்றும்
எழுவதோ இஃதின்ன முதைப்போல்
காட்டி னின்றும் வருகுவதோ — நிலாக்
காற்றைக் கொண்டு தருகுவதோ — வெளி
நாட்டி னின்றுமித் தென்றல் கொணர்வதோ
நாத மிஃதென் உயிரை யுருக்குதே
பறவை யேதுமொன்றுள் ளதுவோ — இங்ஙன்
பாடுமோ அமுதக்கனற் பாட்டு
மறைவி னின்றுங் கின்னர ராதியா ர்
வாத்தியத்தி னிசையிது வோ–அடி
கண்ணனூதிடும் வேய்ங்குழல் தானடீ
காதி லேயமு துள்ளத்தில் நஞ்சு
பண்ணன் றாமடி பாவையார் வாடப்
பாடி யெய்திடும் அம்படி தோழி
காலாஉனை நான்சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன்
காலருகே வாடா! சற்றேஉனை மிதிக்கிறேன் — அட
வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன் — நல்ல
வேதாந்த முரைத்த ஞானியார் தமையெண்ணித் துதிக்கிறேன்–ஆதி
மூலாவென்று கதறிய யானையைக் காக்கவே — நின்றன்
முதலைக்கு நோ¢ந்ததை மறந்தாயோ? கெட்ட மூடனே — அட
ஆலால முண்டவ னடிசர ணென்ற மார்க்கண்டன் –தன
தாவி கவரப்போய் நீபட்ட பாட்டினை யறிகுவேன் — இங்கு
நாலாயிரம் காதம் விட்டகல் உன்னை விதிக்கிறேன் – ஹரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன் — அட
| ||
