மலர்கள்

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம், பொதுகவிதை | Friday 7 May 2010 1:00 AM

மனதை கொள்ளை கொள்ளும் நளினம்

மணத்தோடு மனம் பரவும் குதூகலம்

இனமெனும் பலவகையும் மின்னும்

இளமையெனும் தென்றலில் தவழும்

வாசமற்ற நிறத்தாளும் அசத்தும்

வண்ண எழிலான சூலோடும் சேரும்

கவர்ச்சியான போர்வையோடும் அணைக்கும்

கண்டு மகிழச் செய்யும் பரவசம்

மருந்தாகி புண்ணாற்றும் தாயுள்ளம்

அருவிருத்தாகி அரவணைத்து தாலாட்டும்

விநாடி வாழ்வெனினும் மலர்ந்த முகம்.

VN:F [1.8.3_1051]
Rating: 6.9/10 (8 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +4 (from 4 votes)
  • Share/Bookmark

தவறும் தப்பும்

Posted by Kaviulagam | இயற்கை, பொதுகவிதை | Wednesday 21 April 2010 1:00 AM

தவறு என்பது தவறிச்செய்வது

தப்பு என்பது தெரிந்து செய்வது

தவறிக் கொண்டேயிருப்பவன்

தவறாமலிருக்க மன உறுதிசெய்வது

தப்புதப்பாய் செய்து கொண்டேயிருப்பது

தப்பித்து அதிலிருந்து விடுபடுவது நல்லது

தப்பும், தவறும் தொடர்வது

என்ன நியாயமது நீ உணர்வது

பெரியோர்கள் சொல்லும் நெறிமுறையெது

நீ கடைப்பிடிப்பது இனி உயர்வதில் தடையெது.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (4 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +4 (from 4 votes)
  • Share/Bookmark

மாமனிதன்

Posted by Kaviulagam | சமுதாயம், பொதுகவிதை | Saturday 17 April 2010 1:00 AM

எண்ணங்கள் உயர்வானால்

செயல்கள் உயர்வாகும்

செயல்கள் உயர்வானால்

ஏற்றங்கள் உருவாகும்

ஏற்றங்கள் உயர்வானால்

உள்ளங்கள் தெளிவாகும்

உள்ளங்கள் தெளிவானால்

உண்மைப் புலனாகும்

உண்மைத் தெரிந்தால்

உன்னை உணர்வாய்

உன்னை உணர்ந்தால்

உலகம் உன்னை மதிக்கும்

மதிக்கும் மனிதனானால்

நீ மனிதனில் மாமனிதனாவாய்

மாமனிதனானால் மகாத்மாவாய்.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (6 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +6 (from 6 votes)
  • Share/Bookmark

Page 1 of 3512345102030...Last »



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!