மனப்பக்குவம்
மனதை அடக்கிவிட்டால்
மனம் பக்குவமாகிவிடும்
மனதை விசாலப் படுத்திவிட்டால்
மனம் பக்குவமாகிவிடும்
மனதை தன்னம்பிக்கை நீரால்
குளிப்பாட்டிவிட்டால் மனம் பக்குவமாகிவிடும்
மனதை விழுப்புண் பெறவைத்தால்
மனம் பக்குவமாகிவிடும்
மனதை மமதை கொள்ளாமல்
வைத்தால் மனம் பக்குவமாகிவிடும்
மனதை அன்புமயமாக்கி விட்டால்
மனப்பக்குவமாகிவிடும் உன் மனம்.






