மனநிறைவு
தவறு செய்வது இயல்பு
இயல்பை உணர்வது மன்னிப்பு
மன்னிப்பு கேட்பது பண்பு
பண்பு கொள்வது உயர்வு
உயர்வது என்றுமே சிறப்பு
தன் தவறை ஒப்புக்கொள்வது துணிவு
பிறர் தவறை மன்னிப்பிது
பின்மறப்பது கனிவு
இதுவே மன நிறைவு.
தவறு செய்வது இயல்பு
இயல்பை உணர்வது மன்னிப்பு
மன்னிப்பு கேட்பது பண்பு
பண்பு கொள்வது உயர்வு
உயர்வது என்றுமே சிறப்பு
தன் தவறை ஒப்புக்கொள்வது துணிவு
பிறர் தவறை மன்னிப்பிது
பின்மறப்பது கனிவு
இதுவே மன நிறைவு.
விரலுக்கேற்ற வீக்கம்
வரவிற்கேற்ப செலவு
உழைப்பிற்கேற்ற ஊதியம்
உரத்திற்கேற்ற விளைச்சல்
போதும் என்ற மனமே
சிக்கனமே சிறப்பான வாழ்வு
இருப்பதைக் கொள்வதில் மனநிறைவு
அகலக்கால் தலைகால் தெரியாது
ஆழம் தெரியாது காலை விடுவதா
ஆடம்பரம் பம்பரமாய் சுழன்று
உன்னை பாரமாய் சுமக்க வைக்கும்
எளிமையிலும் இனிமை நிம்மதி இருக்கும் இதை
உணர்ந்தால் உனக்கு வாழ்வு என்றுமே மணக்கும்.
வாதம் வம்பு பண்ணக்கூடாது – பிடி
வாதம் வம்பு பண்ணக்கூடாது
வாதம் செய் – நல்ல
லட்சியங்களுக்கு – பிடி
வாதம் கொள் அதை அடைய
வாதம் செய் – நல்ல
செயல்களுக்கு – பிடி
வாதம் செய் அதை
நிறைவேற்றுவதற்கு
வாதம் செய் – நல்ல
எண்ணகளை வளர்க்க – பிடி
வாதம் செய் அதை வளர்த்துக்கொள்
வாதம் செய் உயர்நிலை அடைய – பிடி
வாதம் செய் பண்போடு வாழ.
| ||
