நம் நாடு
விஞ்ஞான வளர்ச்சி கண்டோம்
மெய்ஞான உயர்ச்சி கொண்டோம்
கல்வியில் உயர்வு பெற்றோம்
பொருளாதார சிறப்பு உண்டோம்
தொழில் வளங்கள் புரிந்தோம்
நிலவளங்கள் அதிகரித்தோம்
ஓய்வின்றி உழைக்க அறிந்தோம்
ஒப்பிலா பாரதத்தில் பிறந்தோம்
ஓங்கி பாரில் உயர்வோம் – இனும்
விந்தைகள் பல புரிவோம்.






