முதுமை
இளமையை அசைபோடும் இன்பகீதம்
இனிய பேரக்குழந்தைகளின் இனிய நாதம்
இவ்வுலக அனுபவத்தின் இதமான வேதம்
இன்ப துன்பங்களின் இதமான பாதம்
இருவரும் சுகமாக பரிமாறும் சாதம்
இயலாமை வந்தாலும் இல்லை சோககீதம்
இனிவரும் காலங்களில் முதுமையலை இனிமையாய் மோதும்
இளசுகளை புரிந்து நடந்துக் கொண்டால் போதும்
முதுமையும் ஒரு வசந்தகாலம்.






