ஆனை முகத்தோனே, ஐங்கரனே
தந்தமொடித்து பாரதம் தந்தவனே
சிந்தையுள் உனை என்றும் மறவேனே
என்றும் எனக்கு நீ அருள்வோனே.
கலைவாணி, வருவாய் நீ
வரம் தருவாய் நீ, அறிவுச்சுடர் நீ
அழியா புகழ் நீ, அகம்மகிழ நீ
அருளும், ஆசியும் தரவா நீ - வாணி.
அறிமுகம்
அன்பு சகோதர, சகோதரிகளுக்கு
அன்பு சகோதரியின் அன்பு வணக்கம்.
கவி உலகம் என்ற தலைப்பில்
இணைய தளத்தில் இணைகிறேன்.
இவ்வுலகத்தில், உலகைகாண
அழைத்துச் செல்கிறேன். எனக்கு
ஒத்துழைப்பு தருவீர்கள் என எண்ணுகிறேன்.
நன்றியுடன்
தே.மாலதி
கடலூர்.